வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (18:56 IST)

பினராயி விஜயனுக்கே அபராதம் விதித்த கேரள போக்குவரத்து துறை.. தமிழ்நாட்டில் நடக்குமா?

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற காருக்கு கேரளா போக்குவரத்து துறை அபராதம் விதித்ததை அடுத்து தமிழ்நாட்டில் இது போல் நடக்குமா என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் 
 
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தனது அலுவலகத்திற்கு காரில் பயணம் சென்று கொண்டிருந்த போது அவர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக முதல்வரின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பினராயி விஜயன் காருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவரது அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 முதல்வரின் காராக இருந்தாலும் கறாராக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்திருப்பதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரள முதல்வர் சீட் பெல்ட் அணியாமல் சென்றது ஏஐ அடிப்படையில் இயங்கும் கேமராக்கள் மூலம் கண்டுபிடித்த காவல்துறையினர் இந்த அபராதத்தை விதித்துள்ளனர் 
 
இதெல்லாம் கேரளாவில் மட்டுமே சாத்தியம் என்று தமிழகம் உட்பட வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று நடக்க வாய்ப்பே இல்லை என்றும் நிட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் 
 
Edited by Mahendran