ஒருநாள் முன்னதாக அயோத்தி செல்லும் பிரதமர் மோடி.. என்ன காரணம்?
பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ஒரு நாள் முன்னதாகவே செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக 11 நாள் விரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் அயோத்திக்கு ஜனவரி 22ஆம் தேதி செல்வார் என்று திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு நாள் முன்கூட்டியே அவரது பயணத்திட்ட அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வட மாநிலங்களில் தற்போது பனிமூட்டம் இருப்பதால் கடைசி நேரத்தில் விமானம் தாமதமாக வாய்ப்பு உள்ளது என்றும் அதனால் தான் பிரதமர் மோடி ஒரு நாள் முன்கூட்டியே அயோத்தி செல்ல இருப்பதாகவும் தருகிறது. ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான வேத சடங்குகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்பதும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி ஒட்டுமொத்த இந்தியாவும் ராமர் மயமாகிவிட்டது என்றும் ராமரின் அவதார நோக்கம் மற்றும் உத்வேகம் ஆகியவை பக்திக்கு அப்பாற்பட்டது என்றும் நல்லாட்சியின் அடையாளம் ராமர் என்றும் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் நான் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பின்னர் அடுத்த நாளே பொதுமக்களுக்கு ராமர் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva