திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (06:28 IST)

ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பல அரசியல் பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் வருகை தர உள்ளனர். ஆனால் காங்கிரஸ் உள்பட சில எதிர்க்கட்சி தலைவர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளனர். 
 
ஆனால் அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் தலைவர்கள் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு குடும்பத்துடன் செல்வேன் என்று தெரிவித்துள்ளார் 
 
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி அன்று கலந்து கொள்ள தனக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்றும் ஆனாலும் 22 ஆம் தேதிக்கு பிறகு குடும்பத்துடன் சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva