ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (07:43 IST)

மோடியின் கண்கள் வாளை விட கூர்மையானது: நடிகை கங்கனா ரனாவத்

பிரதமர் மோடியின் கண்கள் வாளை விட கூர்மையானது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அதற்காக பிரதமர் மோடி விரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் ராமர் கோயில் மற்றும் பிரதமர் மோடி குறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் பிரதமர் மோடியின் கண்கள்  வாளை விட கூர்மையானது என்றும் மோடி அவர்கள் நம்மில் ஒருவர் என்பதை நாம் அறிந்து பெருமைப்பட வேண்டும் என்றும்  ஆனால் அதே நேரத்தில் நம்மை விட அவரை வித்தியாசப்படுத்தி காட்டுவது அவருடைய நோக்கம் செயலின் தீவிரம் என்றும் தெரிவித்துள்ளார்


மோடியின் படத்தை உற்றுப் பாருங்கள், அந்த படத்தில் அவரது கண்களை பாருங்கள், இது வெறும் தோற்றம்தான், ஆனால் சுடர்விடும் வாளை விட கூர்மையானதாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது

மோடியின் புகைப்படத்தை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

Edited by Siva