1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (20:29 IST)

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

ramar temple
அயோத்தி ராமர் கோவில் குறித்து கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அயோத்தி ராமரை பிராண பிரதிஷ்டை செய்த தலைமை அர்ச்சகர் திடீரென காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அது மட்டும் இன்றி அயோத்தியில் உள்ள ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் சமீபத்தில் இடிந்து விழுந்து சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம் அடைந்துள்ளார் என்ற தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் பாதுகாப்பு காவலர் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்தது, ரயில் நிலைய சுற்றுச்சுவர் இடிந்தது ஆகியவை அயோத்தியின் மர்மமான அறிகுறிகளாக இருந்த நிலையில் தற்போது தலைமை அர்ச்சகர் மரணம் அடைந்ததை அடுத்து பக்தர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran