இன்று ராம நவமி .. அயோத்தி ராமரின் நெற்றியில் சூரிய ஒளி.. ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..!
இன்று ராம நவமி தினத்தை எடுத்து அயோத்தி ராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி படுவதை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது என்பதும் இந்த கோவிலின் கும்பாபிஷேக தினத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தாமரை தரிசனம் செய்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் அயோத்திகராமர் கோயில் கட்டப்படும் போது ராம நவமி தினத்தில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளிபடும் வகையில் கட்டப்பட்டது என செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் அயோத்தி கோவில் திறக்கப்பட்டு முதல் ராம நவமி இன்று கொண்டாடப்படும் நிலையில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி தெரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து ராமரை நெற்றியில் சூரிய ஒளி பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் குவிந்துள்ளதாகவும் இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெள்ளியாகி உள்ளது.
Edited by Mahendran