ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (07:06 IST)

இன்று அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா.. ஆன்லைனில் நேரலையில் பார்ப்பது எப்படி?

ramar temple
இன்று நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரலையில் எப்படி பார்ப்பது என்பதைப் பற்றி பார்ப்போம். 
 
தூர்தர்ஷனில் அனைத்து மொழிகளிலும் இன்று காலை 7 மணியில் இருந்து நேரடியாக ஒளிப்பரப்பாகவுள்ளது. டிடி நியூஸ், டிடி தமிழ், டிடி நேஷனல் ஆகிய சேனல்களில் நேரடி காட்சிகளை பார்க்கலாம். 
 
மேலும் மேலும், PVR INOX திரையரங்குகளில் இன்று காலை 11 மணி முதல் 3 மணி வரை ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் திரையிடப்பட இருப்பதாகவும், இதற்கு கட்டணம் 100 ரூபாய் என  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பு நேரலையில் காலை 7 மணி முதல் பல தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளின் இணையதளங்களிலும் இலவசமாக நேரலை பார்க்கலாம்
 
Edited by Siva