1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (11:56 IST)

உதயநிதி தலைக்கு வெகுமதியை உயர்த்த தயார்: அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா..!

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி போதவில்லை என்றால் அதிகமாக அறிவிக்க தயார் என அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியார் உதயநிதி தலையை சீவிக் கொண்டு வந்தால் ரூபாய் 10 கோடி தரப்படும் என்று தெரிவித்தார். 
 
அதற்கு உதயநிதி கேலியாக 10 கோடி எதற்கு, பத்து ரூபாய் சீப்பு இருந்தால் நான் தலையை சீவிக் கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உதயநிதியின் தலையை சீவுவதற்கு 10 கோடி போதவில்லை என்றால் வெகுமதியை உயர்த்த தயாராக இருக்கிறேன் என்றும் சனாதான தர்மத்தை இழிவு படுத்துவதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
 
இந்த நாட்டில் நிகழ்ந்த எல்லா வளர்ச்சிக்கும் சனாதன தர்மம் மட்டுமே காரணம் என்றும் உதயநிதி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களின் உணர்வுகளை உதயநிதி புண்படுத்தி விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva