திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (10:46 IST)

என் தலைய சீவ எதுக்கு 10 கோடி..? 10 ரூவா போதுமே! – கலைஞர் ஸ்டைலில் கலாய்த்த உதயநிதி!

சனாதான தர்மத்தினை இழிவாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்த சாமியாரை கிண்டல் செய்து பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி.



செப்டம்பர் 2ம் தேதி திராவிடர் கழகம், தமுஎசக இணைந்து நடத்திய சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய கருத்துகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டெல்லி பாஜக அலுவலகம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதற்கிடையே அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளது மேலும் சர்ச்சையாகி உள்ளது. இந்த தலைக்கு விலை விவகாரம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் “எனது தலையை சீவுவதற்கு எதற்கு ரூ.10 கோடி? 10 ரூபாய் சீப்பு போதுமே, நானே சீவிக்கிட்டு போயிடுவேன்!” என கிண்டலாக கூறியுள்ளார். முன்பு கலைஞர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் வந்தபோது இதுபோன்று அவர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுவதுண்டு.

மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் ”எனது தலைக்கு இந்த சாமியார் ரூ.10 கோடி விலை வைத்துள்ளார். என் தலை மீது அவருக்கென்ன ஆசை? சரி நீ சாமியார் என்றால் உனக்கு எப்படி ரூ.10 கோடி வந்தது? நீ உண்மையான சாமியாரா? போலி சாமியாரா?” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K