தாலியை நாய் சங்கிலியுடன் ஒப்பிட்ட பேராசிரியர் – கோவாவில் இந்து அமைப்புகள் போராட்டம்!
கோவாவில் பேராசிரியராக இருக்கும் ஷில்பா சுரேந்திர பிரதாப் சிங். என்ற உதவி பேராசிரியர் தனது பேஸ்புக்கில் எழுதிய பதிவு ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கோவாவில் உள்ள வி.எம். சல்கோகார் சட்ட கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் ஷில்பா சுரேந்திர பிரதாப் சிங். இவர் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண்கள் தாலி அணிவதையும் நாய்களுக்கு சங்கிலி அணிவதையும் ஒப்பிட்டு ஒரு பதிவை எழுதியிருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பிக்க மிகப்பெரிய பரபரப்பு உண்டானது.
மேலும் சிலர் அவர் வேலை செய்யும் கல்லூரிக்கு சென்று அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில் ஷில்பாமீது பிரிசு 295ஏ-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை தொடர்ந்து மிரட்டி வந்த ஜா என்பவர் மேல் இந்திய சட்டப்பிரிவு 504 மற்றும் 506 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.