1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mentally disorder passenger threat another passengers in flight

எல்லாரும் கையை தூக்குங்க.. நான் ஒரு தீவிரவாதி! – நடுவானில் பீதி கிளப்பிய ஆசாமி!

National
டெல்லியிலிருந்து கோவா சென்ற விமானத்தில் தன்னை ஒரு தீவிரவாதி என சொல்லி பயணிகளை மிரட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து கோவா புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்துள்ளது. அப்போது அதில் பயணித்த ஜியா உல் ஹக் என்ற நபர் திடீரென தன்னை ஒரு தீவிரவாதி என கூறிக்கொண்டு பயணிகளை மிரட்ட தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட கோவாவை நெருங்கியிருந்த விமானம் பனாஜியில் தரையிறக்கப்பட்டதும் அந்த ஆசாமியை விமான தள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அப்போது அவர் தன்னை காவல் சிறப்பு அதிகாரி என்றும் அண்டர்கவரில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் குறித்த தகவல்களை திரட்டி விசாரித்ததில் அவருக்கு மனநோய் இருப்பதும், அதற்காக சில மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து அவர் பனாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு: துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு