குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்... அடித்து விரட்டிய வனிதா !

Sinoj| Last Updated: திங்கள், 19 அக்டோபர் 2020 (16:10 IST)


தமிழ் சினிமா நடிகையும் பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை
3 வதாக திருமணம் செய்து கொண்டார்.


பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பிள்ளை இருப்பதும் தெரியவந்தது. பின்னர் பீட்டர் பால் தனது மனைவியை விவகாரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்துகொண்டது சர்ச்சையானது. இதுகுறித்து டிஜிட்டல் மற்றும் யுடியூப்களில் விவாதிக்கப்பட்டு
ஏகப்பட்ட பஞ்சாயத்து ஆகி
போலீஸில் புகார் அளிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளைக்கொண்டாட குடும்பத்தினருடன் வனிதா கோவா சென்றார் இதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்நிலையில் கோவாவில் பீட்டர் பால் நன்றாகக் குடித்துவிட்டு வனிதாவிடன் ரவுசு விட்டுள்ளார் என்று தெரிகிறது./ இதனால் கடுப்பான வனிதா பீட்டரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது ஒரு வதந்தி என்று கூறப்பட்ட நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’ எல்லோருடைய வார்த்தையும் உண்மை. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் PP ’’ என்று பதிவிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :