திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (19:31 IST)

அதர்வாவுக்கு விரைவில் டும் டும் டும் – மணப்பெண் யார் தெரியுமா?

நடிகரும் தயாரிப்பாளருமான அதர்வா கோவாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் விரைவில் அந்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா சினிமாவில் அறிமுகமாகி பரதேசி போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். ஆனாலும் தொடர் வெற்றிகள் கிடைக்காமல் தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அந்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.