1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Assam and West bengal second schedule election finished,

மேற்கு வங்கம், அசாமில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: எத்தனை சதவீதம்?

அசாம்
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் இந்த இரு மாநிலங்களிலும் நடந்தது 
 
இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இரு மாநிலங்களிலும் உள்ள மக்கள் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மேலும் வாக்களிக்கும் பகுதிகளில் துணை ராணுவ படையினர் உள்பட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது 
 
இந்த நிலையில் இரவு 7 மணிக்கு மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு சதவீதம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
மேற்கு வங்க மாநிலத்தில் 80.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அசாமில் 73% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்த இரு மாநிலங்களிலும் நல்ல வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பதும் இளைஞர்கள் அதிக அளவு வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு தம்பி: அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த கனிமொழி