1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (07:46 IST)

மேற்குவங்கம் & அசாம் மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!

மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தின் ஒரு சில தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 

 
ஆம், மேற்குவங்த்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தின் 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, கடந்தமுறையைவிட தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 37% வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பதற்றமான பகுதிகளிலும் இருப்பதால் கூடுதல் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.