1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Aryan Khan returns home

28 நாட்கள் சிறையில்... வீடு திரும்பிய ஆர்யன் கான்

ஆர்யன் கான்
போதைப்பொருள் கடத்தில் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். 

 
போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு கோரப்பட்டு பல முறை ஒத்திவைக்கப்பட்டு ஒருவழியாக அவருக்கு ஜாமீன் கிடைத்தது. 
 
ஆம், ஆர்யன் கானுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் 28 நாட்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலை ஆகி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு நாள் ஜூலை 18 - ஸ்டாலின் அறிவிப்பு!!