செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (10:43 IST)

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை: மீறினால் சிறை & அபராதம்!

ரயில் பயணத்தின் போது பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 
பொதுவாக ரயில்களில் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்ட பொருள்கள், பட்டாசுகள், டீசல், பெட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல தடை இருந்து வருகிறது. இருப்பினும் தீபாவளிப் பண்டிகை நெருங்கி விட்டதால், மறைமுகமாக பயணிகள் ரயில் மூலம் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வாய்ப்புகள் உள்ளன. 
 
எனவே, ரயில் பயணத்தின் போது பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் செலுத்த நேரிடும் என பயணிகளுக்கு விழிப்புணர்வு வழிகாட்டுதல் வழங்க காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைகளும் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளது.