திங்கள், 22 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (13:09 IST)

இன்னும் 2-3 நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்.. டெல்லி அமைச்சர் பேட்டி

இன்னும் 2-3 நாட்களில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை மட்டுமின்றி சிபிஐ-யும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக ஆதாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. பாஜகவின் பதற்றம் அதிகரித்து வருவது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் பேட்டியளித்துள்ளார்,.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஆறு முறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் அவர் ஆஜராகவில்லை. இதனை அடுத்து ஏழாவது முறையாக அவர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இந்த முறையும் அவள் ஆஜராக மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லி அமைச்சர் பரத்வாஜ் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால்  கைது செய்யப்படுவார் என்று தனக்கு தகவல் வந்துள்ளதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran