ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க தயார்; ஆனால்... செக் வைத்த கெஜ்ரிவால்

Last Updated: வியாழன், 9 மே 2019 (13:26 IST)
நிபந்தனையை நிறைவேற்றினால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க தயார் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 
 
டெல்லியை பொருத்தவரை காவல்துறை மற்றும் சில முக்கிய அரசு பொறுப்புகள் அனைத்தும் மத்தின் அரசின் கையில் உள்ளது. இதனை பயன்படுத்தி மத்திய அரசு டெல்லி அரசை கட்டுப்படுத்துவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வந்தார்.
 
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் பேசியது பலருக்கும் அதிர்ச்சியான ஒன்றாக இருந்துள்ளது. அந்த பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு...
டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது ஆம் ஆத்மி கட்சியின் பிரதான கோரிக்கை. தேர்தலுக்கான அறிக்கையில்லும் இதனை கட்சி குறிப்பிட்டிருந்தது. எனவே, டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க தயார் என்றால் ராகுல் காந்திக்கு ஆதரவை தர நாங்களும் தயார். அவரை பிரதமராக ஏற்கவும் தயார் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :