கடைசி ஓவரில் த்ரில் வெற்றி! சென்னையுடன் மோதுகிறது டெல்லி!

Last Modified வியாழன், 9 மே 2019 (06:45 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கடைசி ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற டெல்லி அணி, நாளை இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் சென்னையுடன் மோதுகிறது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களும், வில்லியம்சன் 28 ரன்களும், விஜய்சங்கர் 25 ரன்களும், முகமது நபி 20 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி, 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிபி ஷா 56 ரன்களும், ரிஷப் பண்ட் 49 ரன்களும் எடுத்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியை அடுத்து டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது,


இதில் மேலும் படிக்கவும் :