டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு: சி.எஸ்.கேவுடன் மோதப்போவது யார்?

Last Modified புதன், 8 மே 2019 (19:12 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற முதல் பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி வீழ்த்திய நிலையில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இன்று வெற்றி பெறும் அணி, சிஎஸ்கே அணியுடன் வரும் 9ஆம் தேதி மோதும். அதில் வெற்றி பெறும் அணியே இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் மோதும்.
இந்த நிலையில் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளது. சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் ஐதராபாத் அணி பேட்டிங் களத்தில் இறங்கவுள்ளது.

இன்றைய டெல்லி அணியில் பிரித்திவ் ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், முண்ட்ரோ, ரூதர்போர்டு, அக்சார் பட்டேல், கீமோ பால், அமித் மிஸ்ரா, டிரெண்ட் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் உள்ளனர்.
அதேபோல் இன்று விளையாடும் ஐதராபாத் அணியில் சஹா, குப்தில், மனிஷ் பாண்டே, வில்லியம்சன், விஜய் சங்கர், தீபக் ஹூடா, நபி, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அஹ்மத் மற்றும் பசில் தம்பி ஆகியோர் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :