ரூ.5000 கோடி நஷ்ட ஈடு: காங்கிரஸ் மீதான வழக்கை வாபஸ் பெற்ற அனில் அம்பானி!

Last Modified செவ்வாய், 21 மே 2019 (17:38 IST)
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பத்திரிகை ஒன்றின் மீது ரூ.5000 கோடி நஷ்ட ஈடு கோரி பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி தாக்கல் செய்த வழக்கை அவர் சற்றுமுன் வாபஸ் பெற்றார்.
இந்தியாவையே உலுக்கிய ரபேர் போர் விமான ஒப்பந்தம் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் அனில் அம்பானி, ரிலையன்ஸ் பாதுகாப்பு என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்று காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஒரு பத்திரிகை, செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், அந்த பத்திரிகையில் வெளியான தகவல் தவறானது என்று அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தங்கள் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட அந்த பத்திரிகை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறும் அனில் அம்பானி தாக்கல் செய்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்றுமுன் அனில் அம்பானி இந்த நஷ்ட ஈடு வழக்கை திரும்ப பெற்றார். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலின் எக்சிட்போல் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும் காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகள் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கும் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அனில் அம்பானி தனது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :