செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 மே 2019 (14:01 IST)

’அவரின் பேச்சு ’...ராகுல் காத்தியின் கன்னத்தில் விழுந்த ’ பளார் ’ - தமிழிசை சவுந்தரராஜன்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பேச்சு கன்னத்தில் விழுந்த அறை என்று கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள பிரபலமான இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
நாட்டில் தேர்தல்கள் மூலமாகத்தான்  ஜனநாயகம் வெற்றி பெறுகிறது.அத்தைகைய தேர்தல்களை நடத்துகிற தேர்தல் ஆணையம் தம் கடமையை நன்கு ஆற்றுகிறது.

தேர்தல் ஆணையத்தின் முதல் ஆணையர் சுகுமார் முதல் தற்போது பதவியில் உள்ளவர் வரைக்கும் எல்லோரும் நல்லவிதமாக பணியாற்றியுள்ளனர். இப்படிபட்ட தேர்தல் ஆணையர்களை நாம் விமர்சிக்கலாகாது.தற்போது, முடிவடைந்துள்ள மக்களவைத் தேர்தலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், முன்னால் நிதி அமைச்சராவும் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்தவர் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் இந்த கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகவும், மோடிக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் விமர்சித்துவரும் நிலையில் நாட்டின் முக்கியப் பொறுப்புவகித்த முன்னாள் ஜனாதிபதி இந்த தகவலை கூறியுள்ளதை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றி கூறியுள்ளது ராகுல் காந்தியின்  கன்னத்தில் அறைந்தாற்போலும் என்று தெரிவித்துள்ளார்.