பாஜக எத்தனை இடங்களை பிடிக்கும்; எண் ஜோதிடம் என்ன சொல்கிறது...?
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய முதல் கட்ட மக்களவை தேர்தல் மே 19ஆம் தேதி வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இறுதி கட்ட வாக்கு பதிவு முடிவடைந்த பின்னர், அனைத்தும் தேசிய மற்றும் தனியார் ஊடங்களும் தேர்தலுக்கு பிந்தைய தங்களின் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
இந்த கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளதாக பெரும்பான்மையான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதன் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாகின்றன. இந்த முடிவுகளை அரசியல் கட்சிகளுடன் மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எண் ஜோதிட கருத்து கணிப்பின்படி முடிவுகள் பற்றிய விவரங்கள் இதோ.....
எண் ஜோடிடத்தின் படி...
alphabet value
B = 2
J = 10
P = 16
Add = 28
கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியான நாள்;
16/5/2014
7+5+7=19
19*28 = 532/2
= 266 + 16
= 282
இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது.
தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்;
23/5/2019
5 + 5 + 12 = 22
22*28 = 616/2
= 308 + 23
= 331 Places
எல்லோரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ள நிலையில், மேற் சொன்ன எண் ஜோதிட கருத்து கணிப்பின்படி முடிவுகள் வெளியாகுமா? இல்லையா என்பது வரும் 23-ஆம் தேதி தெரிய வரும்.
இதனை கணித்தவர்: எண் கணித ஜோதிடர் ஹரிஹர சுப்ரமணியம்.