புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (09:35 IST)

முடியும் காலக்கெடு – என்ன செய்து தப்பித்தார் அனில் அம்பானி ?

சோனி எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை அனில் அம்பானி செலுத்திவிட்டதால் அவர் சிறை தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சோனி எரிக்சன் நிறுவனம் தங்கள் தரவேண்டிய 550 கோடிகளை தராமல் இழுத்தடிப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அம்பானி மீதான குற்றச்சாட்டை உறுதி செயதது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கடன் தொகையை செலுத்தக் கூறி உத்தரவிட்டது. ஆனால் அம்பானி இன்னமும் அதை செலுத்தாமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உள்ளது.

அதையடுத்து சோனி எரிக்சன் நிறுவனத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையை மார்ச் 19 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. ,மேலும் கடன் தொகையை செலுத்தும் வரை அனில் அம்பானி வெளிநாட்டிற்கு செல்லக் கூடாது எனவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்றோடு நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடியவுள்ள நிலையில் அனில் அம்பானி சோனி நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய நிலுவைத்தொகையைக் கட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சிறை செல்வதில் இருந்து அனில் அம்பானி தப்பித்துள்ளார்.