வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (16:08 IST)

சிறை செல்கிறாரா அனில் அம்பானி ? – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

ஸ்வீடன் நாட்டுக் கம்பெனி ஒன்றிற்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சோனி எரிக்சன் நிறுவனம் தங்கள் தரவேண்டிய 550 கோடிகளை தராமல் இழுத்தடிப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அம்பானி மீதான குற்றச்சாட்டை உறுதி செயதது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கடன் தொகையை செலுத்தக் கூறி உத்தரவிட்டது. ஆனால் அம்பானி இன்னமும் அதை செலுத்தாமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உள்ளது.

அதையடுத்து சோனி எரிக்சன் நிறுவனத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. ,மேலும் கடன் தொகையை செலுத்தும் வரை அனில் அம்பானி வெளிநாட்டிற்கு செல்லக் கூடாது எனவும் அறிவித்துள்ளது.