புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (21:05 IST)

காகித விமானம் கூட அனில் அம்பானியால் தயாரிக்க முடியாது: ராகுல் காந்தி

இந்திய விமானப்படைக்கு தேவையான ரஃபேல் விமானத்தை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்க அனில் அம்பானியின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியபோது, 'அனில் அம்பானியால் காகித விமானம் கூட தயாரிக்க முடியாது, அவருக்கு எப்படி ரஃபேல் ஒப்பந்தம் கிடைத்தது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
 
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவற்காக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், பிரதமர் மோடி தனது நண்பர் அனில் அம்பானிககு ரூ.30 ஆயிரம் கோடி விமானப்படையின் பணத்தை எடுத்து கொடுத்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருவது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று குஜராத் மாநிலம் காந்திநகரில் காங்கிரஸ் கட்சியின் செயல் குழுவின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: விமான படையின் பாக்கெட்டிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடி திருடி அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. ரபேல் ஒப்பந்தத்தில், ஆப்செட் ஒப்பந்தராகியிருக்கும் அனில் அம்பானியால் காகித விமானம் கூட தயாரிக்க முடியாது என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று பேசினார்.