வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (11:00 IST)

கடன் கழுத்த நெரிச்சாலும்; அம்பானி மவுசு குறையலப்பா...

ஆண்டுதோறும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. வழக்கம் போல் 2019 ஆம் ஆண்டிற்கான உலகில் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ஃப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
 
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, 13 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் முகேஷ் அம்பானியின் சகோதரரும் ஆர்.காம் நிறுவனத்தின் தலைவருமான அனில் அம்பானி 1349 ஆம் இடத்தில் உள்ளார். 
 
அனில் அம்பானி கடன் நெருக்கடியால் சிகி தவித்து வருகிறார். ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (ஆர்காம்) நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் அளவிற்கு அவரது கடன் உள்ளது. இருப்பினும் அவர் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் மற்றொரு விஷயம் என்னவெனில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராசக்ட்சர், குஜராத்தில் புதிய விமான நிலையத்தை கட்ட ரூ.648 கோடி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ராஜ்கோட் நகரில் உள்ள ஹிரசார் என்னும் பகுதியில் இந்த விமான நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.