வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (16:32 IST)

அம்பானி வழக்கில் ...ஜட்ஜ் உத்தரவை திருத்திய இரு பதிவாளர்கள் டிஸ்மிஸ்...

அனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவை மாற்றி அதை திருத்தி வெளியிட்டதற்காக இரண்டு உதவி பதிவாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி சில நாட்களூக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
 
நீதிபதி ரோகிந்தன் எஃப் நாரிமன், அமர்வு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரு நிலையில், இவ்வழக்கு  சம்பந்தமாக நீதிபதி நாரிம எழுதிய உத்தரவையும், விதிமுறைகளையும் மாற்றி திருத்தி எழுதி  உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக இரண்டு உதவியாளர்களான மானவ்  சர்மா, மற்றும் தபான் குமார் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
நீதிபதிகள் உத்தரவை திருத்திய பதிவாளர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.