செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 ஜூன் 2025 (18:23 IST)

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!
அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளான நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த 243 பேர்களில் 170 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
அது மட்டும் இன்றி உயிரிழந்த உடல்கள் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போய் உள்ளதாகவும் உடல் தனியாக, தலை தனியாக இருக்கும் காட்சியும் பார்க்க முடிகிறது என விமான விபத்தில் மீட்பு பணியை செய்து வருபவர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மேலும் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் எடுத்த வீடியோக்களும்  வைரல் ஆகி வருகின்றன. அதில் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போய் உள்ள காட்சிகளும் தலை தனியாக உடல் தனியாக இருக்கும் காட்சிகளும் இருப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
Edited by Siva