1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Andhra govt says plus two exam on July

12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும்: ஆந்திர அரசு அறிவிப்பு!

12ஆம் வகுப்பு
ஆந்திராவில் 12ஆம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் இந்திய அளவில் சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஆந்திராவில் கொரோனா தொற்று குறைந்த பிறகு ஜூலை மாதம் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது 
 
தேர்வை நடத்தும்போது கொரோனா தொற்றால் ஒரு மாணவர் உயிரிழந்தார் கூட அதற்கு ஆந்திர அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பதை உறுதியாக மாணவர்கள் மத்தியில் தெளிவாக அறிவித்து மாணவர்கள் குழப்பத்தை போக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆந்திர அரசு அதிகாரிகள் இது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
சென்னையில் மேலும் ஒரு ஏடிஎம்-இல் ரூ.16 லட்சம் கொள்ளை!