திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (16:58 IST)

நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

நீட் தேர்வு நடத்துவது குறித்து தேசிய தேர்வு முகமை முடிவு எடுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு குறித்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிபிஎஸ்சி தேர்வு அடுத்து லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ போன்ற நுழைவுத் தேர்வுகள் ஏன் ரத்து செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.
 
இந்த கேள்விக்கு பதிலளித்த சுப்ரீம் கோர்ட் ’சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுக்கும், நீட் போன்ற தேர்வுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் என்று கருத்து தெரிவித்தது. மேலும் நீட் தேர்வை நடத்துவதா வேண்டாமா என்று தேசிய தேர்வு முகமை முடிவு எடுக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.