1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (11:11 IST)

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பிரபல நடிகரை கைது செய்த போலீஸார்

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பிரபல நடிகரை கைது செய்த போலீஸார்
சபரிமலைக்குள் செல்ல முயற்சிக்கும் பெண்களை இரண்டு துண்டாக்க வேண்டும் என சர்ச்சையான கருத்தை கூறிய நடிகர் கொல்லம் துளசியை கைது செய்தனர்.
 
உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் உள்ளே செல்லலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி பெண்கள் சபரிமலைக்குள் சென்று ஐயப்பனை தரிசனமும் செய்தனர்.
பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பிரபல நடிகரை கைது செய்த போலீஸார்
 
இந்நிலையில் இந்த தீர்ப்பு வந்த புதிதில் மலையாள நடிகரும், பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டி ஒரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டை டெல்லிக்கும் அனுப்ப வேண்டும் என பேசினார்.
பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பிரபல நடிகரை கைது செய்த போலீஸார்
 
இவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. போலீஸார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரனை நடைபெற்று வந்த நிலையில் போலீஸார் நேற்று கொல்லம் துளசியை அதிரடியாக கைது செய்தனர்.