திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (17:53 IST)

நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு...முதல்வர் எடப்பாடியாருக்கு விஷால் அழைப்பு...

நடிகர் சங்கம் சார்பில் சமீபத்தில் இளையராஜாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இன்று காலைவேளையில் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.பைரசி விஷயத்தில் நான் கடவுளாக நினைக்கும் தமிழக அரசைத்தான் நம்புகிறேன். அரசு நினைத்தால் ஒரே நாளில் பைரசியை ஒளிக்க முடியும். நடிகர் சங்க கட்டிட பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் திறப்பு விழா நடக்கும். இவ்வாறு விஷால் தெரிவித்தார்.