ஃபோர்ப்ஸ் பட்டியலில் விஜய் தேவரகொண்டா

Last Updated: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (16:28 IST)
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 30 வயதிற்குள் சாதித்த இந்தியர்களின் பட்டியலில் திரையுலகில் இருந்து விஜய் தேவரகொண்டா இடம்பெற்றுள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டு தோறும் பல்வேறுப் பிரிவுகளின் கிழ் சாதனையாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. போர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்தியப் பிரிவான போர்ப்ஸ் இந்தியா இப்போது 30 வயதிற்குள் சாதித்த இந்திய சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதற்காகத் தொழில்துறை, உற்பத்தி மற்றும் ஆற்றல், விளம்பரத் துறை, வர்த்தகம், ஊடகம், விவசாயம் உள்ளிட்ட 16 துறைகளில் இருந்து சாதனை மனிதர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  இதற்காக 300 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் இருந்து நிபுணர்களின் உதவியோடு 175 பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் இருந்து 30 பேர் இறுதி செய்யப்பட்டதாக ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 30 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் ஒரேயொரு இந்திய நடிகர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா மட்டுமே திரைத்துறையில் இருந்து இந்தப் பட்டியலுக்குத் தேர்வாகி உள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :