திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 31 மார்ச் 2018 (11:20 IST)

உத்திர பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு

உத்திர பிரதேசத்தில் மர்ம நபர்கள் சிலர் டாக்டர் அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தலைவர்களின் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. தமிழகத்தில் பெரியார் சிலை, கேரளாவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.
 
இந்நிலையில் உத்திர் பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். சிலையின் தலைப்பகுதியை உடைத்து துண்டாக்கியுள்ளனர்.  தகவலறிந்து  சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிலையை சீரமைத்தனர்,
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். உ.பி யில் இதற்கு முன்  சில தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.