திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (17:04 IST)

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்திற்காக பொங்கி எழுந்த மூன்றாம் கலைஞர்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் பிசியாக இருக்கின்றார். அவரது நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் காலடி எடுத்து வைக்க உதயநிதி முயற்சி செய்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் அவருக்கு வைத்த பட்டம் 'மூன்றாம் கலைஞர்'

இந்த நிலையில் இதுவரை சினிமா சம்பந்தமான தகவல்களை மட்டுமே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த உதயநிதி தற்போது அரசியல் கருத்துக்களையும் கூற ஆரம்பித்துவிட்டார். இன்று பெரியார் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்! உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்' என்று பொங்கியுள்ளார்.