திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (14:52 IST)

ஆஃபர்களை அள்ளி விடும் ஆம் ஆத்மி – சூடுபிடிக்கும் டெல்லி தேர்தல்

டெல்லியில் சட்டப்பேர்வை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

இந்திய தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி காலம் முடிவடையும் நிலையில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக இருக்கிறது.

இன்று டெல்லியில் ’கெஜ்ரிவாலின் உறுதி அட்டை’ என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்கள். அதில் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை, 24 மணி நேரமும் தடையில்லா தண்ணீர், மின்சாரம் ஆகியவை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் இளைஞர்களுக்கு நகரமெங்கும் இலவச இணைய வசதி, பெண்களுக்கு இலவச பேருந்து ஆகிய திட்டங்களை ஆம் ஆத்மி அறிவித்து செயல்படுத்தியும் உள்ளது.

இதனால் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரலாறு காணாத அளவில் டெல்லி காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் அதீத குளிர் காரணமாக ஏற்பட்ட இழப்புகளில் ஆம் ஆத்மி சிறப்புற பங்காற்றியதாக தெரியவில்லை என பேசி கொள்ளப்படுகிறது. இது ஒருவகையில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவாகவும் அமையலாம்!