வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (18:28 IST)

2 குழந்தைக்கும் மேல் கூடாது! புதிய சட்டம் கொண்டு வாங்க! – ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!

இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் பெற்று கொள்வதில் கட்டுப்பாடு விதிக்குமாறு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் பேசியுள்ளார்.

உலக நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நாடாக சீனா மற்றும் இந்தியா முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்நிலையில் சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக கடுமையாக இந்த விதிமுறையை பின்பற்றி வருகிறது சீனா.

இந்நிலையில் 2020ம் ஆண்டில் புத்தாண்டு தினத்தில் அதிக குழந்தைகள் பிறந்த நாட்டில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக புள்ளி விவரம் வெளியானது. இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் சீனாவை விட அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் ”இந்தியாவின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவில் உள்ள மக்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும். இதை இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் எந்த வித பாகுபாடு இல்லாமலும் சட்டமாக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்” என பேசியுள்ளார்.