திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (23:37 IST)

மாநிலங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா  3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,  விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.

கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்களும் தற்போது தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 வயது மூதாட்டி ஒருவருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. இது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சமீபத்தில் கர்ப்பிணிகளும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவளியாகிறது.