வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (21:41 IST)

தம்பி சூர்யாவை மிரட்டினால்.....சீமான் எச்சரிக்கை

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக யாரும் இல்லையா என்று பிரபல இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இன்று சீமான் சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீட்தேர்வு. புதிய கல்விக் கொள்கை, புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நீட்தேர்வு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கரு நாகராஜன் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவுடன் பொது விவாதம் நடத்த தயார் என்று கூறியுள்ளார்

அதேபோல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வை எதிர்த்து எதிர்த்து வருகின்றனர் என்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் கம்யூனிஸ்டு ஆளும் மாநிலங்களிலும் இந்த எதிர்ப்பு இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

நீட் தேர்வில் தாக்கம் குறித்து ஆராயும் அரசாணைக்கு எதிராக பாஜகவின் வழக்கு சட்டபூர்வமான போராட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அமீர்,  நீட்தேர்வு. புதிய கல்விக் கொள்கை, புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்துவரும் சூர்யாவிற்கு திரைத்துறையில் யாரும் ஆதரவு தரவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஒளிப்பதிவுச் சட்டத்திருத்தத்திற்கு  எதிராக நடிகர் சூர்யா கருத்து தெரிவித்ததற்காக அவரை பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் . எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவைத் நெருங்க  முடியும் எனத் தெரிவித்துள்ளார்.