திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (23:19 IST)

ஸ்டாலின் தலைமையில் …இனி பெருமைமிகு தொண்டர் – மகேந்திரன்

நடிகர் கமல்ஹாசனின் ம.நீ.ம கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் இன்று திமுகவின் இணைந்துள்ளார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவிய நிலையில் மநீம கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த பலர் கட்சியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. மநீம கட்சியின் டாக்டர் மகேந்திரனும் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மகேந்திரன் திமுகவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது அறிக்கையில் மகேந்திரன்  தன்னுடன் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 78 பேர் கொண்ட முதற்கட்டக் குழுவும்  இந்நிகழ்வில் திமுகவில் இணையவுள்ளனர் எனத் தெரிவித்தார். அதன்படி தற்போது அக்கட்சியின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பால வேட்பாளராகப் போட்டியிட்ட பத்மபிரியாவும் இணைந்துள்ளார்.

இது மக்கள் நிதி மய்யம் கட்சியினர் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டாக்டர் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். பெரியாரின் சுயமரியாதை சித்தாந்தங்களையும்,அண்ணாவின் மாபெரும் தமிழ்க்கனவையும்தொடர்ந்து சுமந்து சென்ற சுயமரியாதை சூரியன் கலைஞர் அவர்களின் பாதையில், கழகத்தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. @mkstalin அவர்களின் தலைமையில்... இனி பெருமையுடன் தொண்டனாக நானும் எனத் தெரிவித்துள்ளார்.