1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (17:53 IST)

ஆகஸ்ட் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!

2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பே மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30 முதல் ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் நேரடி வகுப்புகள், தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது