1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இளம்பெண்ணை காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை: பள்ளி மாணவர்கள் கைது!

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
விருதுநகரை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் கார்மெண்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரை வாலிபர் ஒருவர் காதலித்ததாக கூறிய நிலையில் இளம்பெண்ணை அருகிலிருந்த மெடிக்கல் ஷாப் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்
 
இதனை வீடியோ எடுத்து அவர் தனது நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ள நிலையில் அவரது நண்பர்களும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் 
 
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர்களில் நான்கு பேர் பேர்கள் பள்ளி மாணவர்கள் என்று கூறப்படுகிறது இதனை அடுத்து இளம்பெண் கொடுத்த புகாரின்படி 8 பேர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.