திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (11:27 IST)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால், வரும் நாட்களில் நடக்கவிருந்த பாஜக வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமானதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்
 
இந்நிலையில் வாஜ்பாயின் உடல்நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை  மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை  தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இதன் எதிரொலியாக, ஆகஸ்ட் 18, 19 நடக்கவிருந்த பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.