1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Amni bus stoped from coming to chennai

சென்னைக்கு ஆம்னி பேருந்து நிறுத்தம்....

Chennai
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வரவிருந்த ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.   
 
அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறமுடியும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  சற்று நேரத்திற்கு முன்னர் வெளியான அறிக்கையில் “கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. முக்கிய உறுப்புகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னைக்கு வர திட்டமிட்டிருந்த பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது