ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 மே 2019 (21:19 IST)

அஜித், தோனிக்கு இடமில்லையா? ரசிகர்கள் ஆவேசம்

தனியார் நிறுவனம் ஒன்றின் 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' பட்டியலில் தல அஜித் மற்றும் தல தோனி ஆகிய இருவரது பெயர்களும் இடம்பெறவில்லை என்பதால் இருதரப்பு ரசிகர்களும் ஆவேசம் அடைந்துள்ளனர்.
 
பிரபல தனியார் அமைப்பு ஒன்று 2019ஆம் ஆண்டின் நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் 2019' என்ற பட்டியலை தயார் செய்தது. இந்த பட்டியலில் அகில இந்திய திரையுலகினர் பிரிவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், சல்மான்கான், அக்சய்குமார் மற்றும் ஷாருக்கான் ஆகிய ஐவர் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் தென்னிந்திய திரையுலகினர் பட்டியலில் மூன்று பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோர்கள் மட்டுமே ஆகும். இந்த பட்டியலில் அஜித், சிரஞ்சீவி, பிரபாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இடம்பெறவில்லை
 
அதேபோல் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராத் கோஹ்லி, சச்சின் தெண்டுல்கர், ரோஹித் சர்மா ஆகிய மூவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட தோனிக்கு கூட இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. மேலும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனே, காத்ரினா கைப், மாதுரி தீக்சித், அலியா பட், கஜோல் ஆகியோர் முதல் ஐந்து இடங்களிலும், ஐஸ்வர்யாராய் 6வது இடத்திலும் பிரியங்கா சோப்ரா 7வது இடத்திலும், லாரா தத்தா 8வது இடத்திலும், சன்னிலியோன் 11வது இடத்திலும் உள்ளனர். 
 
மேலும் ஆன்மீகவாதிகளில் அன்னை தெரசாவும், சமூக சேவகர்களில் அன்னா ஹசாரேவும்  'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' பட்டியலில் உள்ளனர்.