விஜய், ரஜினி வரிசையில் சூர்யா.. என்.ஜி.கே-விற்கு கிடைத்த கவுரவம்!

Last Updated: திங்கள், 20 மே 2019 (16:13 IST)
விஜய், ரஜினி வரிசையில் நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே படத்திற்கு டிவிட்டர் நிறுவனம் எமோஜி அளித்துள்ளது. 
 
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே. படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை கொண்டாட சூர்யா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த கொண்டாட்டத்தை அதிகரிக்கும் வகையில் சூர்யாவின் என்.ஜி.கே. படத்திற்கு எமோஜி அளித்துள்ளது ட்விட்டர். 
 
அதோடு, எமோஜி கொடுத்த ட்விட்டர் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் சூர்யா. #NGKFire, #NGKFromMay31, #NGKTwitterEmoji ஆகிய ஹேஷ்டேக்குகளை சூர்யா ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
இதற்கு முன்னர் விஜய்யின் மெர்சல் படத்திற்கும் ரஜினியின் காலா படத்திற்கு டிவிட்டர் எமோஜி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :