வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 மார்ச் 2018 (17:03 IST)

கணவன் அடித்தால் மனைவி திருப்பி அடிக்க வேண்டும்: நடிகை வரலட்சுமி

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது திரையுலக நண்பர்களும் ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வரலட்சுமி பிறந்த நாளையும், உலக மகளிர் தினத்தையும் சேர்த்து கொண்டாடும் வகையில் சென்னையில் , ரத்ததான முகாம், அன்னதானம், மகளிருக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்யும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரலட்சுமி மகளிருக்கு நிகழும் கொடுமைகள் குறித்து ஆவேசமாக பொங்கினார். ஒரு கட்டத்தில் அவர் பேசியபோது கணவன் அடித்தால் மனைவி திருப்பி அடிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். அவருடைய இந்த ஆவேசத்தை பார்த்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களே அதிர்ச்சி அடைந்தனர்.