1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. aicde announced fifty eight college closed

நாடு முழுவதும் 58 இன்ஜினியரிங் காலேஜை இழுத்து மூடியாச்சி!.. முக்கிய அறிவிப்பு...

college
பன்னிரண்டாம் வகுப்புக்கு பின் பலருக்கும் பொறியியல் கல்லூரியில் சேர்வது நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் தொடர்பான பொறியியல் படிப்பை பலரும் விரும்புகிறார்கள். எனெனில், அந்த துறையில் படித்தால் மட்டுமே அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், கம்ப்யூட்டர் மட்டுமில்லாமல் பொறியியலில் பல பிரிவுகள் இருக்கிறது. எனவே கடந்த பல வருடங்களில் இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் அதிகரித்துவிட்டன..

ஒவ்வொரு வருடமும் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் வேலை கிடைக்கிறதா என்றால் அது பெரிய கேள்வி குறிதான். இந்நிலையில்தான் இந்தியா முழுவதும் 2025 - 26 கல்வி ஆண்டில் 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்லூரி கவுன்சில் அறிவித்திருக்கிறது. கல்லூரிகளின் தரம், பராமரிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை சோதனை செய்து உறுதி செய்தபின் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

இதில் தமிழகத்தில் இரண்டு கல்லூரிகள் அடக்கம். அதிகப்படியாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 12 கல்லூரிகள் மூடப்பட்டது. அதேபோல் மத்திநாடு முழுவதும் 58 இன்ஜினியரிங் காலேஜை இழுத்து மூடியாச்சி!.. முக்கிய அறிவிப்பு...ய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலுங்கானா மற்றும் பஞ்சாபில் 4 கல்லூரிகளும் மூடப்பட்டன. இந்த கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் எனவும் ஏற்கனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர்கள் அங்கேயே படிப்பை தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
கவ்விப்பிடித்த சிங்கம்!.. பாசமாக தாடையை நீவி எஸ்கேப் ஆகிய நபர்!.. வைரல் வீடியோ!...